மாவட்ட செய்திகள்

வீடுகள் இன்றி தவிக்கும் பழங்குடியின மக்கள் + "||" + Indigenous people suffering from homelessness

வீடுகள் இன்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்

வீடுகள் இன்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்
ஆண்டிப்பட்டி அருகே வீடுகள் இன்றி பழங்குடியின மக்கள் தவித்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி: 

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தகோவில் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு தொகுப்பு வீடுகளை வழங்கியுள்ளது. ஆனால் அப்பகுதியை சேர்ந்த மற்ற சமூகத்தினர் அந்த வீடுகளை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பழங்குடியின மக்கள் வீடுகள் இன்றி தவிக்கின்றனர். 

அவர்கள் குடியிருக்க வீடுகள் இல்லாத காரணத்தால் வனப்பகுதியில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். கரடி உள்ளிட்ட வனவிலங்குகளால் பெரும் இன்னல்கள் ஏற்படுகிறது. மேலும் அவர்களின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால் பள்ளி படிப்பை பாதியில் கைவிடும் நிலையும் உள்ளது. 

எனவே வீடு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.