மாவட்ட செய்திகள்

மினி லாரியில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் + "||" + Seizure of 2 tonnes of ration rice smuggled in a mini truck

மினி லாரியில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மினி லாரியில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மினி லாரியில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியம்பாடி

வாணியம்பாடி பகுதியில் இருந்து வெலதிகாமணிபெண்டா மலை சாலை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு மினி லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றதை கண்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் மினி லாரியை நிறுத்தியுள்ளனர். உடனே மினி லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். லாரியில் பார்த்த போது ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி சென்றது தெரியவந்தது. 

உடனடியாக வாணியம்பாடி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர், அங்கு சென்ற தாசில்தார் மோகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தீபன் தலைமையிலான வருவாய் துறையினர் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் மினி லாரியை பறிமுதல் செய்து உணவு பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும் ரேஷன் அரிசி கடத்தி சென்ற நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.