மாவட்ட செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு முகாம் + "||" + Corona Awareness Camp

கொரோனா விழிப்புணர்வு முகாம்

கொரோனா விழிப்புணர்வு முகாம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 48-ன் சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு, திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார். முகாமில், 300 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், கல்லூரி உதவி பேராசிரியர்கள் தாவீது ராஜா, தனு உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கவிதா செய்திருந்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா விழிப்புணர்வு முகாம்
சிவகங்கையில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது.