மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில்காங்கிரஸ் கட்சியினர் மனிதசங்கிலி போராட்டம் + "||" + In Dindigul Congress Party Human Chain Struggle

திண்டுக்கல்லில்காங்கிரஸ் கட்சியினர் மனிதசங்கிலி போராட்டம்

திண்டுக்கல்லில்காங்கிரஸ் கட்சியினர் மனிதசங்கிலி போராட்டம்
திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியினர் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
பிரதமர் நரேந்திரமோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார். அப்போது அவர் செல்லும் பாதையில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து பஞ்சாப் மாநில அரசை கண்டித்து தமிழகத்தில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பா.ஜனதாவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று திண்டுக்கல் மெயின்ரோட்டில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் துணை தலைவர் ஜோசப் மார்ட்டின், பொது செயலாளர் வேங்கைராஜா, வழிகாட்டுதல் குழு தலைவர் முகமதுசித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி பெரியார் சிலை முதல் மணிக்கூண்டு வரை காங்கிரஸ் கட்சியினர் கைகளை கோர்த்தபடி மனித சங்கிலியாக நின்றனர்.