மாவட்ட செய்திகள்

சிறையில் இருந்து விடுதலையான ராஜேந்திர பாலாஜி சிவகாசி திரும்பினார் + "||" + release

சிறையில் இருந்து விடுதலையான ராஜேந்திர பாலாஜி சிவகாசி திரும்பினார்

சிறையில் இருந்து விடுதலையான ராஜேந்திர பாலாஜி சிவகாசி திரும்பினார்
சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சிவகாசி திரும்பினார்.
சிவகாசி, 
சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து,  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு சிவகாசி திரும்பினார்.
ராஜேந்திர பாலாஜி
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்பட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். 
இந்தநிலையில், ராஜேந்திரபாலாஜிக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து நேற்று காலை திருச்சி சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரை திருச்சி சிறை வாசலில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், திருத்தங்கல் நகர் மன்ற முன்னாள் துணைத்தலைவர் பொன் சக்திவேல் உள்ளிட்ட விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர். 
வரவேற்பு
பின்னர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது காரில் திருச்சியில் இருந்து சிவகாசிக்கு வந்தார். மதியம் 1 மணிக்கு சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அங்கு அ.தி.மு.க. மாநில நிர்வாகி வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, விஸ்வநத்தம் ஆரோக்கியம், லட்சுமிநாராயணன், தெய்வம், மகளிர் அணி சுடர்வள்ளி சசிக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு சால்வை கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர் சற்று நேரம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்தார்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. மண்டபத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் விடுதலை
இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 12 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
2. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 2 பேர் விடுதலை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 2 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3. தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா் ஜாமீனில் விடுதலை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.