மாவட்ட செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளத்துப்பாக்கி தயாரித்தவர் கைது + "||" + Near Ottanchattaram Counterfeit gun maker arrested

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளத்துப்பாக்கி தயாரித்தவர் கைது

ஒட்டன்சத்திரம் அருகே கள்ளத்துப்பாக்கி தயாரித்தவர் கைது
ஒட்டன்சத்திரம் அருகே கள்ளத்துப்பாக்கி தயாரித்தவர் கைது செய்யப்பட்டார்.
ஒட்டன்சத்திரம்:
கள்ளிமந்தையம் அருகே உள்ள குருவப்பநாயக்கன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 56). இவர், தனது வீட்டில் கள்ளத்துப்பாக்கி தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக கள்ளிமந்தையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கருப்புசாமியின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவருடைய வீட்டில் இருந்து கள்ளத்துப்பாக்கி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்புசாமியை கைது செய்தனர். அவர் ஒரேயொரு துப்பாக்கி மட்டும் தயாரித்து வைத்திருந்தாரா? அல்லது மேலும் கள்ளத்துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்து உள்ளாரா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.