மாவட்ட செய்திகள்

அரசு பஸ்- லாரி மோதல்; டிரைவர் பலி + "||" + Government bus lorry collision The driver was killed

அரசு பஸ்- லாரி மோதல்; டிரைவர் பலி

அரசு பஸ்- லாரி மோதல்; டிரைவர் பலி
ஆண்டிப்பட்டி அருகே அரசு பஸ்சும், லாரியும் மோதியதில் லாரி டிரைவர் பலியானார்.
ஆண்டிப்பட்டி: 


அரசு பஸ் மோதல்
நெல்லையில் இருந்து தேனியை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரம் பகுதியை சேர்ந்த டிரைவர் குமார் (வயது 45) ஓட்டினார். 
அந்த பஸ் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் விலக்கு என்னுமிடத்தில் வந்தபோது எதிரே செங்கல் சூளைக்கு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது மோதியது. 

லாரி டிரைவர் பலி
இந்த விபத்தில் டிப்பர் லாரி டிரைவரான வைகை அணை அருகே கன்னியமங்கலத்தை சேர்ந்த செல்வக்குமார் (35) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பஸ் டிரைவர் குமார், வடுகபட்டியை சேர்ந்த கண்டக்டர் பாண்டியன் உள்பட பயணிகள் 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். 

விபத்து குறித்து தகவலறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்த லாரி டிரைவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளுக்கே தெரியாமல் இலவச மின் இணைப்பில் பெயர் மாற்றம்
தங்களுக்கே தெரியாமல் இலவச மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் பரபரப்பான புகார் மனு கொடுத்தனர்.
2. பாம்பு கடித்து மூதாட்டி பலி
ஆண்டிப்பட்டி அருகே பாம்பு கடித்து மூதாட்டி ஒருவர் பலியாகினார்.
3. குட்டையில் தவறி விழுந்து மாணவன் பலி
ஆண்டிப்பட்டி அருகே கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து மாணவன் ஒருவன் பலியாகினான்.