மாவட்ட செய்திகள்

சொர்க்கவாசல் திறப்பு + "||" + sorkka vasal

சொர்க்கவாசல் திறப்பு

சொர்க்கவாசல் திறப்பு
விருதுநகர் பெருமாள் கோவில்களில் , சாத்தூர் நகர் சாத்தூரப்பன் கோவிலில் வைகுண்ட ஏகா தசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடை பெற்றது.
சாத்தூர், 
விருதுநகர் பெருமாள் கோவில்களில் , சாத்தூர் நகர் சாத்தூரப்பன் கோவிலில் வைகுண்ட ஏகா தசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடை பெற்றது.
சிறப்பு பூஜை
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாத்தூரப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பு விழாவில் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 
அதேபோல ராமலிங்கபுரம் பெருமாள் கோவில், நென்மேனி பெருமாள் கோவில், ஒத்தையால் ரெங்கநாத பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. 
ஏற்பாடு
பக்தர்கள் அனைவரும் அரசு விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு முககவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதேசி விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி செய்திருந்தார்.
இதேபோல விருதுநகர் ரெங்கநாதர் கோவிலில் பூதேவி, ஸ்ரீதேவியுடன் கருட வாகனத்திலும் விருதுநகர் ராமர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில்  சீனிவாச பெருமாளும் சொக்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.