102 பேருக்கு கொரோனா; வாலிபருக்கு ஒமைக்ரான்


102 பேருக்கு கொரோனா; வாலிபருக்கு ஒமைக்ரான்
x
தினத்தந்தி 13 Jan 2022 3:43 PM GMT (Updated: 13 Jan 2022 3:43 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் உரிய சிகிச்சைக்குபின் வீடு திரும்பியுள்ளார். இதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 102 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் உரிய சிகிச்சைக்குபின் வீடு திரும்பியுள்ளார். இதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 102 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வாலிபருக்கு ஒமைக்ரான்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு அடுத்தபடியாக ஒமைக்ரான் தொற்று மிகவும் வேகமாக பரவி வருவது தெரிந்ததே. தமிழகத்தில் மற்ற பெரும்பாலான மாவட்டங்களில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதன் பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த அவரை பரிசோதித்தபோது தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

102 பேருக்கு கொரோனா

இதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 102 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 21 ஆயிரத்து 231 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சிகிச்சை முடிந்து 17 பேர் வீடு திரும்பி உள்ளார். இதுவரை 20 ஆயிரத்து 399 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 472 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். கடந்த பல மாதங்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் யாரும் பலியாகாமல் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது.
-----------


Next Story