மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 343பேருக்கு கொரோனா + "||" + Corona for another 343 people in Thoothukudi district

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 343பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 343பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த மாவட்டத்தில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 541-ஆக அதிகரித்து உள்ளது. 56 ஆயிரத்து 592 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஆயிரத்து 532 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடியை சேர்ந்த 69 வயது முதியவர், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 417-ஆக உயர்ந்துள்ளது. 
5 பேருக்கு ஒமைக்ரான்
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே ஒருவர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார். மேலும் சிலர் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களின் சளி மாதிரிகள் ஆய்வுக்கான அனுப்பப்பட்டது. இதில் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அவர்கள் 5 பேரும் முடிவு வருவதற்குள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.