மாவட்ட செய்திகள்

தீபத்துடன் ஆணி படுக்கையில் யோகா + "||" + yoga

தீபத்துடன் ஆணி படுக்கையில் யோகா

தீபத்துடன் ஆணி படுக்கையில் யோகா
விவசாயிகளுக்காக தீபத்துடன் ஆணி படுக்கையில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
அருப்புக்கோட்டை, 
தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. விவசாயிகளின் முக்கிய விழாவான தைப்பொங்கலை முன்னிட்டு அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளுக்கு நன்றியை சமர்பிக்கும் வகையில் அருப்புக் கோட்டை யோகா நிலையத்தில் ஆணிப்படுக்கையில் கையில் தீபத்துடன் யோகா செய்து விவசாயிகளுக்கு சமர்பித்தனர். விவசாயிகள் வாழ்க்கை முள் மீது நடப்பது போல் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் ஆணிப் படுக்கையில் யோகா ஆசிரியர் ராஜகோபாலன் நவபாத ஆசனம், தனூராசனம், கோமுகாசனம், ஆகர்ஷண தனு ராசனம், பஸ்சி மோத் தாசனம், சயன பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்தார். பின்னர் யோகா மாணவருடன் இணைந்து கையில் தீபம் ஏந்தி விவசாயி களுக்கு யோகாவை சமர் பித்தனர். தொடர்ந்து யோகா மாணவர்களும் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர். இதில் யோகா நிலையத்தினர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :