மாவட்ட செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில்175 பேருக்கு கொரோனா + "||" + Corona for 175 people

விழுப்புரம் மாவட்டத்தில்175 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில்175 பேருக்கு கொரோனா
கொரோனா
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 46,746 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 45,848 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 540 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றது. இதில் புதிதாக 175 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,921 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று 33 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 45,881 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 682 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.