மாவட்ட செய்திகள்

குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இதுதொடர்பாக டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர். + "||" + A youth was killed when a tractor collided with a motorcycle

குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இதுதொடர்பாக டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

குடவாசல்:
குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இதுதொடர்பாக டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
டிராக்டர் மோதியது
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள செம்பியன் கூந்தலூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சவேரியார் மகன் சாலமன் (வயது32).இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மோட்டார் சைக்கிளில் திருவிடைமருதூர் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். கீரங்குடி கல்லறை அருகே வந்த போது எதிரே கூந்தலூரில் இருந்து ஒரு டிராக்டர் வந்துள்ளது.இதை பார்த்த சாலமன் தனது மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்த முயன்றுள்ளார்.ஆனால் அந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. 
இந்த விபத்தில் சாலமன் நெடுஞ்சாலை துறை மூலம் கட்டப்பட்டுள்ள இரும்பு வேலியில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
விபத்து நடந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் அரை மணி நேரம் சாலமன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார். பின்னர் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக108 ஆம்புலன்சு மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாலமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலை மறியல்
இதை தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவரை உடனடியாக கைது செய்யக்கோரி சாலமனின் உறவினர்கள் மற்றும் செம்பியன் கூந்தலூர் பொதுமக்கள் கூந்தலூர் பஜனை மடம் அருகே பூந்தோட்டம் நாச்சியார்கோவில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்துக்கு காரணமான டிராக்டர் டிரைவரை கைது செய்வோம் என போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டிரைவர் கைது
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் குச்சிப்பாளையத்தை சேர்ந்த மணி மகன் விக்னேஷ் (25) என்பவரை கைது செய்தனர். உயிரிழந்த சாலமனுக்கு திருமணமாகி கஸ்தூரி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.