ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 5:00 PM GMT (Updated: 13 Jan 2022 5:00 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சொர்க்கவால் திறப்பு
ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பு பெற்றது. அதே போன்று ெரங்கநாதர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ெரங்கமன்னாராக காட்சி அளிப்பதால் இங்கும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். 
வைகுண்ட ஏகாதசிையயொட்டி இந்த ஆண்டு்க்கான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் நேற்று காலை 7.35 மணிக்கு திறக்கப்பட்டது. 
சொர்க்கவாசல் வழியாக பெரிய பெருமாள் என அழைக்கப்படும் வடபத்ர சயன பெருமாள் முன்னால் வர அதன் பிறகு ஆண்டாள், ெரங்கமன்னார் தம்பதியராக சொர்க்கவாசல் வழியாக வந்தனர். 11 ஆழ்வார்கள் பெரியாழ்வார் தலைமையில் வரிசையாக நின்று பெருமாளை வரவேற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதன் பிறகு பெரிய பெருமாள் கோவிலில் உள்ள ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சி தொடங்கியது. ராப்பத்து திருவிழா வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. சொர்க்கவாசல் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.
பக்தர்கள் சாமி தரிசனம்
சொர்க்கவாசல் திறப்பின் போது காலை 8 மணி வரை கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகு சமூக இடைவெளியை பின்பற்றி அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர் வரிசையாகச் சென்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story