கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது


கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 13 Jan 2022 5:02 PM GMT (Updated: 13 Jan 2022 5:02 PM GMT)

பொங்கல் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கரும்பு-மஞ்சள் கொத்துக்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

மன்னார்குடி:
பொங்கல் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கரும்பு-மஞ்சள் கொத்துக்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
அலைமோதிய கூட்டம்
பொங்கல் பண்டிகை இன்று(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொங்கல்  பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.  மன்னார்குடி கடைத்தெருவில் பொங்கல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.இதனால் கடைத் தெரு முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 
கரும்பு, வாழைப்பழம், மஞ்சள் கொத்து. இஞ்சி கொத்து, பொங்கல் பானை, ஆப்பை உள்ளிட்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
மாட்டுப்பொங்கல்
பொங்கல் பண்டிகைக்கு  மறுநாள் அதாவது நாளை(சனிக்கிழமை) மாட்டுப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் மாட்டு பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். இதனால் மாடுகளுக்கு தேவையாக புதுகயிறு, மாலைகள், வர்ணங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.
பொங்கல் பொருட்களை விற்பனை செய்ய  சாலையோரங்களில் விவசாயிகள், வியாபாரிகள் சிறு, சிறு கடைகளை அமைத்து விற்பனை செய்தனர். 
வடுவூர்
வடுவூர் மற்றும் உள்ளிக்கோட்டை பகுதிகளில் பொங்கல் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. கடைவீதி பகுதியில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டு இருந்தன. வடுவூர் அண்ணா சிலை அருகிலும், உள்ளிக்கோட்டை பெரியார் சிலை அருகிலும் கரும்பு, மஞ்சள், இஞ்சிக்கொத்து, காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. இதனை பொதுமக்கள ஆர்வமுடன் வந்து வாங்கி சென்றதால் கூட்டம் அலைமோதியது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடைவீதிகளில் பொங்கல் பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.

Next Story