பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்பிய மக்களால் நிரம்பி வழிந்த பஸ்கள்


பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்பிய மக்களால் நிரம்பி வழிந்த பஸ்கள்
x
தினத்தந்தி 13 Jan 2022 5:23 PM GMT (Updated: 13 Jan 2022 5:23 PM GMT)

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்பிய மக்களால் பஸ்கள் நிரம்பி வழிந்தது.


திண்டுக்கல்:
பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் வேலை செய்த மக்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்பினர். அதன்படி திண்டுக்கல்லில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் நேற்று மதியமே பஸ் நிலையத்தில் குவிய தொடங்கினர். மேலும் மாலையில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.
இதனால் திண்டுக்கல்லில் இருந்து மதுரை, நாகர்கோவில், கோவை, திருச்சி, ஈரோடு, சென்னை உள்பட வெளியூர்களுக்கு சென்ற அனைத்து பஸ்களும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. திண்டுக்கல்லில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. எனினும் பலர் பஸ்களில் இடம் கிடைக்காமல் தவித்தனர். மேலும் வெளியூர்களில் இருந்து திண்டுக்கல் வழியாக செல்லும் பஸ்கள் நகருக்குள் வரவில்லை. இதனால் நள்ளிரவு வரை மக்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
இதற்கிடையே திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பொங்கல் பொருட்களை வாங்க குவிந்தனர். இதனால் திண்டுக்கல்லில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு சென்ற அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பலர் இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே சென்றனர்.


Next Story