மாவட்ட செய்திகள்

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு + "||" + The price of flowers has skyrocketed

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
கடலூரில் பூக்கள் விலை கிடுகிடு வென உயர்ந்தது.
கடலூர், 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு கடலூர் மாநகரம் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் வந்து, மொத்தமாகவும், சில்லரையாகவும் பூக்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில்பொங்கல் பண்டிகையையொட்டியும், வெளிமாவட்டங்களில் இருந்து வரத்து குறைவாலும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை  நேற்று ரூ.2 ஆயிரத்துக்கும், ரூ.800-க்கு விற்பனையான குண்டுமல்லி ரூ.1600-க்கும், ரூ.600-க்கு விற்பனையான கனகாம்பரம் நேற்று ரூ.1000-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.120-க்கும், ரூ.120-க்கு விற்ற சாமந்தி ரூ.200-க்கும், ரூ.80-க்கு விற்பனையான ரோஜா ரூ.200-க்கும், கோழிக்கொண்டை ஒரு கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்கிச் சென்றனர்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
மேற்கு வங்காளத்தில் ரெயில் தடம் புரண்டதில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.
2. மேற்கு வங்காளத்தில் கொரோனா உயர்வு; பிரதமருடன் பேச மம்தா பானர்ஜி முடிவு
மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ள சூழலில் பிரதமர் மோடியுடன் பேச மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார்.
3. டெல்லியில் கொரோனா உயர்வு; இரவுநேர ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் விதிக்கப்பட்ட இரவுநேர ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
4. அன்னவாசல் பகுதியில் தொடர் மழையால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
அன்னவாசல் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
5. புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.106.98க்கு விற்பனை
புதுச்சேரியில் பெட்ரோல் விலை 34 காசுகள் உயர்ந்து ரூ.106.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.