மாவட்ட செய்திகள்

பேரூராட்சி பணியாளர்களுக்கு பொங்கல் சீர்வரிசை + "||" + awareness

பேரூராட்சி பணியாளர்களுக்கு பொங்கல் சீர்வரிசை

பேரூராட்சி பணியாளர்களுக்கு பொங்கல் சீர்வரிசை
புகை இல்லா போகி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தலைஞாயிறில் பேரூராட்சி பணியாளர்களுக்கு பழைய பொருட்களை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
வாய்மேடு:-

புகை இல்லா போகி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தலைஞாயிறில் பேரூராட்சி பணியாளர்களுக்கு பழைய பொருட்களை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

போகி பண்டிகை

பொங்கல் பண்டிகை தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகை. பொங்கலுக்கு முந்தைய நாள் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்து தேவையில்லாத பொருட்களை தீயிட்டு அழிப்பார்கள். 
அவ்வாறு பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே அதற்கு மாற்றாக புகை இல்லாத போகி கொண்டாட அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

தலைஞயாயிறு பேரூராட்சி

அதன்படி நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் பழையன கழிதல் என கூறி பொதுமக்கள் மார்கழி மாதத்தில் வீட்டை சுத்தம் செய்து ஒதுக்கிய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது வீடு வீடாக சென்று பழைய பொருட்களை சேகரிக்கப்பட்டன. இந்த பழைய பொருட்களை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் பேரூராட்சி பணியாளர்களுக்கு கரும்பு, வாழை, புதுப்பானை, இஞ்சி, மஞ்சள் கொத்துகள் உள்ளிட்ட பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன. 
இதை செயல் அலுவலர் குகன் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- திடக்கழிவு மேலாண்மையில் குப்பை என்பது தவற விடப் பட்ட வளம் என்ற கோட்பாடு உள்ளது. இதை பணியாளர்களுக்கு எளிதில் புரியவைக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டது. மேலும் புகை இல்லா போகி என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இவ்வாறு சீர்வரிசை வழங்கப்பட்டு உள்ளது. 

ரூ.20 ஆயிரம்

பழைய பொருட்களை விற்று அதன் மூலம் கிடைத்த வருமானம் மூலம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொங்கல் பொருட்கள் தூய்மை பணியாளர்களுக்கு சீர்வரிசையாக வழங்கப்பட்டன. 
இவ்வாறு அவர் கூறினார். 
‘புகை இல்லா போகி’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட இந்த நூதன நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.