மீன்பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் மூழ்கினார். கதி என்ன? போலீஸ் விசாரணை


மீன்பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் மூழ்கினார். கதி என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 13 Jan 2022 5:51 PM GMT (Updated: 13 Jan 2022 5:51 PM GMT)

மீன்பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் மூழ்கினார்

குடியாத்தம்

குடியாத்தம் அருகே மீன்பிடிக்க சென்ற தொழிலாளி ஏரியில் மூழ்கினார். அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

குடியாத்தத்தை அடுத்த பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரோஸ் குமார் (வயது 40), தேங்காய் உரிக்கும் தொழிலாளி. நேற்று காலையில் பாக்கம் ஏரியில் மீன்பிடிப்பதற்காக ரோஸ்குமார் வலைவீசினார். மாலையில் வலையில் மீன் சிக்கியுள்ளதா என பார்ப்பதற்காக ஏரியில் இறங்கி உள்ளார். நீண்டநேரமாகியும் அவர்  திரும்பவில்லை. அதனால் கரைமேல் இருந்த அவரது கிராமத்தை இது குறித்து அவரது உறவினர்களுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

பேரணாம்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிராம மக்கள் உதவியுடன் இரவு சுமார் 7 மணி வரை ரோஸ்குமாரை தேடினர். பின்னர் இருட்டி விட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது. அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) தேட இருப்பதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து பரதராமி போலீசார் இந்த  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story