வேலூர் மாவட்டத்தில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 336 பேருக்கு கொரோனா


வேலூர் மாவட்டத்தில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 336 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Jan 2022 5:52 PM GMT (Updated: 13 Jan 2022 5:52 PM GMT)

2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 336 பேருக்கு கொரோனா

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்த 236 பேர் உள்பட 336 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 

இதில், வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் அடங்குவர். இன்ஸ்பெக்டர் கருணாகரன் டாக்டர்களின் ஆலோசனையின்படி வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார். சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. போலீஸ் நிலையத்தில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர். இன்ஸ்பெக்டரின் அறை மூடப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் தங்கியிருக்கும் பிறமாவட்டங்களை சேர்ந்த 56 பேருக்கும், வெளிமாநிலங்களை சேர்ந்த 21 பேருக்கும் தொற்று உறுதியானது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

Next Story