மாவட்ட செய்திகள்

மாத்தூர் அருகே அந்தோணியார் ஆலயத்தில் 5 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது + "||" + Man arrested for stealing 5 pound necklace from St. Anthony's Church

மாத்தூர் அருகே அந்தோணியார் ஆலயத்தில் 5 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது

மாத்தூர் அருகே அந்தோணியார் ஆலயத்தில் 5 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது
மாத்தூர் அருகே அந்தோணியார் ஆலயத்தில் 5 பவுன் நகையை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆவூர்:
அந்தோணியார் ஆலயம்
குளத்தூர் தாலுகா, மாத்தூர் அருகே உள்ள செங்களூர் மேலப்பட்டியில் அந்தோணியார் ஆலயம் உள்ளது. நேற்று முன்தினம் காலை தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள ராவுசாவுசாபட்டி கிராமத்தை சேர்ந்த செத்திலின்ராஜா என்பவரது மகன் பெத்தலேகம் (வயது 23) என்பவர் அங்குள்ள நிர்வாகிகளிடம் சென்று தான் ஆலயத்தில் உள்ள சொரூபங்களுக்கு புதிதாக பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறேன். அதனால் இங்கு உள்ள சொரூபங்களுக்கு பெயிண்ட் அடித்து புதுப்பித்து தருகிறேன் என்று கேட்டுள்ளார். 
இதைக் கேட்ட அந்தோணியார் ஆலய நிர்வாகிகள் அங்குள்ள சொரூபங்களை காட்டி இதற்கு பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று அந்த வாலிபரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து அந்த வாலிபர் அங்கு உள்ள சொரூபங்களுக்கு பெயிண்ட் அடித்து விட்டு அதற்கான தொகையை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் நேற்று முன்தினம் மாலை கிறிஸ்தவமக்கள் ஜெபத்திற்கு வரும்போது அங்குள்ள அந்தோணியார் சொரூபத்தில் தலையில் அணிந்திருந்த 3 பவுன் கிரீடம், கைகளில் அணிந்திருந்த 2 பவுன் உள்பட 5 பவுன் தங்க நகைகள் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
வாலிபர் கைது 
இதுகுறித்து ஆலய நிர்வாகி அதே ஊரை சேர்ந்த ஜஸ்டின் திரவியம் என்பவர் பெயிண்ட் அடிக்க வந்த நபர் தான் நகைகளை திருடிச் சென்றிருக்கலாம் என்று மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் தஞ்சாவூர் மாவட்டம் ராவுசாபட்டி கிராமத்திற்கு சென்ற போலீசார் அங்கு மறைவான இடத்தில் பதுங்கி இருந்த வாலிபர் பெத்தலேகமை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மேலப்பட்டி அந்தோணியார் ஆலயத்தில் சொரூபத்தில் இருந்த நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து பெத்தலேகமை கைது செய்த மாத்தூர் போலீசார் அவரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து நகைகளையும் போலீசார் மீட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தடையை மீறி குண்டம் இறங்க வந்த இந்து முன்னணியினர் 30 பேர் கைது
தடையை மீறி குண்டம் இறங்க வந்த இந்து முன்னணி அமைப்பினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
3. தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் கைது
வத்திராயிருப்பு அருகே வெடி விபத்து தொடர்பாக தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
4. வீடு புகுந்து பெண்ணிடம் 9 பவுன் நகை பறித்த கட்டிட தொழிலாளி கைது
ராமநாதபுரத்தில் வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவத்தில் மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
5. பொது இடத்தில் ரகளை செய்தவர் கைது
பொது இடத்தில் ரகளை செய்தவர் கைது செய்யப்பட்டார்.