மாவட்ட செய்திகள்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் கிணற்றில் பிணமாக கிடந்தார் + "||" + The man who lost money in online gambling lay dead in the well

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் கிணற்றில் பிணமாக கிடந்தார்

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் கிணற்றில் பிணமாக கிடந்தார்
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் கிணற்றில் பிணமாக கிடந்தார்
ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த மோசூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 32), பட்டதாரியான இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் பணத்தை இழந்த அவருக்கு கடன் தொல்லை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் கடந்த 11-ந் தேதி முதல் மோகனை காணவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் திமிரி போலீசில் புகார் செய்திருந்தனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் மோகன் பிணமாக கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து தீயணைப்புத்துறை மற்றும் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை மற்றும் போலீசார் மோகனின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.