திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 13 Jan 2022 5:55 PM GMT (Updated: 13 Jan 2022 5:55 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சொர்க்கவாசல் திறப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசிையயொட்டி அதிகாலை நடை திறந்து அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கோவிலில் உள்ள பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கும், கஜலட்சுமி அம்மனுக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. 

அதிகாலை 5.50 மணியளவில் சொர்க்கவாசல் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. முன்னதாக திரளான பக்தர்கள் சாமி சன்னதியில் குவிந்திருந்தனர். சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும் அவர்கள் வைகுண்ட வாசல் வழியாக வெளியே வந்தனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விடிய, விடிய சாமி தரிசனம் செய்தனர். 

பெரும்பாலான பக்தர்கள் நேற்று அதிகாலையில் இருந்து கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர பெருமாள், சின்னக்கடை தெருவில் உள்ள பூத நாராயணர், அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள சீனிவாச பெருமாள் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆரணி

ஆரணி சார்பனார்பேட்டையில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் அதிகாலை 4 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் ராஜகோபுரம் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ேகாவிந்தா.. கோவிந்தா.. என பக்திகோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

கொசப்பாளையம் அலர்மேல் மங்கை தாயார் சமேத சீனிவாசபெருமாள் கோவில், ஆரணி- தச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில், எஸ்.வி. நகரத்தில் உள்ள சீனிவாசபெருமாள் கோவில், சேவூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Next Story