மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே நிறுத்தி வைத்திருந்த காரில் திடீர் தீ + "||" + Sudden fire in a parked car

ஆம்பூர் அருகே நிறுத்தி வைத்திருந்த காரில் திடீர் தீ

ஆம்பூர் அருகே நிறுத்தி வைத்திருந்த காரில் திடீர் தீ
நிறுத்தி வைத்திருந்த காரில் திடீர் தீ
ஆம்பூர்

ஆம்பூர் அருகே நிறுத்தி வைத்திருந்த காரில் திடீரென தீபிடித்து எரிந்தது.

ஆம்பூர் பைபாஸ் சாலை அருகே உள்ள விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு சொந்தமான கார் மெக்கானிக் ஷெட் அதே பகுதியில் உள்ளது. அங்கு சர்வீஸ் செய்ய கொண்டு வரப்பட்ட ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று காலை அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட சசிகுமார் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். கார் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.