மாவட்ட செய்திகள்

லாரி டிரைவரை தாக்கிய 2 பேர் கைது + "||" + 2 arrested for assaulting lorry driver

லாரி டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

லாரி டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
மணல்மேடு அருகே லாரி டிரைவரை தாக்கிய 2 பேைர ேபாலீசாா் கைது ெசய்தனா்.
மணல்மேடு:
மணல்மேடு அருகே லாரி டிரைவரை தாக்கிய 2 பேரை போலீசாா்  கைது செய்தனா்.
2 பேர் கைது
மணல்மேடு அருகே மல்லியகொல்லை மெயின்ரோட்டை சேர்ந்தவர் கலையரசன் மகன் கலைவாணன் (வயது 29). லாரி டிரைவரான இவர், சம்பவத்தன்று மல்லியகொல்லையில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு  சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்கள் மது போதையில் ஏற்பட்ட பிரச்சினையால் காலைவாணனை தாக்கியதாக கூறப்படுகிறது.
 இதில் காயம் அடைந்த கலைவாணன்  மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வில்லியநல்லூரை சேர்ந்த வேலாயுதம் மகன் அய்யப்பன் (26), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித் (27) ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுசில்குமார் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.