மாவட்ட செய்திகள்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு + "||" + Heaven's Gate Opening

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று இரவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவட்டார்,
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று இரவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆதிகேசவ பெருமாள் கோவில்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில்  வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இதனையொட்டி காலை கோவில் நடைதிறக்கப்பட்டு, திருப்பள்ளி உணர்தல், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கலச பூஜை, உஷ பூஜை, உச்ச பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் பல்வேறு மலர்களால் புஷ்பாபிஷேகத்தை தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இரவு கருட வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட சொர்க்க வாசல் வழியாக ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளினார். இதனையொட்டி கோவில் கிழக்கு வாசல், மேற்கு வாசல், கருவறை வாசல்களில் நேந்திரன் வாழைக்குலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பக்தர்கள் தரிசனம்
சொர்க்கவாசல் வழியாக கருட வாகனத்தில் பெருமாள் மேற்குவாசல் வழியாக எழுந்தருளியதைத்தொடர்ந்து அவருடன் கருட வாகனத்தில் கிருஷ்ண பகவானும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
விழா ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன்குமார் தலைமையில் கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்தபடி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சாெர்க்க வாசல் திறக்கப்பட்டது.
2. பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
கரூரில் நேற்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
3. கோதண்டராமசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
கோதண்டராமசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
4. நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வைகுண்ட ஏகாதசியையொட்டி நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
5. வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு இன்று காலை நடைபெறுகிறது.