மாவட்ட செய்திகள்

கோர்ட்டு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் கைது + "||" + AIADMK threatens to kill court employee Celebrity arrest

கோர்ட்டு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் கைது

கோர்ட்டு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் கைது
மயிலாடுதுறையில் கோர்ட்டு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் கோர்ட்டு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
அ.தி.மு.க. பிரமுகர் கைது
மயிலாடுதுறை அருகே தேரழுந்தூர் தென்பாதி பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 54). இவர், மயிலாடுதுறை கோர்ட்டில், கட்டளை பணியாளராக பணியாற்றி வருகிறார். மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தென்புறம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (56). அ.தி.மு.க. கிளை செயலாளரான இவர், மயிலாடுதுறை கோர்ட்டிற்கு உள்ளே சென்றுள்ளார்.  அப்போது பணியில் இருந்த கணேசன், கொேரானா காரணமாக கோர்ட்டுக்குள் யாருக்கும் அனுமதி கிடையாது, எனவே வெளியே செல்லுங்கள் என்று கூறி ஸ்ரீதரை வெளியேற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், தன்னை திட்டியதோடு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணேசன் மயிலாடுதுறை போலீசில் புகார் கொடுத்தார். இந்த  புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகநாதன் மற்றும் போலீசார், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட ஸ்ரீதரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.