மாவட்ட செய்திகள்

சாலை விபத்தில் இளம்பெண் பலி; 2 பேர் காயம் + "||" + road accident

சாலை விபத்தில் இளம்பெண் பலி; 2 பேர் காயம்

சாலை விபத்தில் இளம்பெண் பலி; 2 பேர் காயம்
அரசு பஸ்சை முந்தி சென்றபோது சாலை விபத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். மேலும், 2 பேர் காயம் அடைந்தனர்.
கரூர், 
இளம்பெண் பலி
வெள்ளியணை அருகே உள்ள பொரணியை சேர்ந்தவர் அருண் (வயது 19). இவர் தனது அக்காள் ப்ரீத்தா(26)வுடன் மோட்டார் சைக்கிளில் கரூர்-திருச்சி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னால் சென்ற தனியார் பஸ்சை அருண் முந்த முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதி அந்த வழியாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ப்ரீத்தா தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண் லேசான காயம் அடைந்தார். 
மருத்துவமனையில் சிகிச்சை
மேலும் இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கோவக்குளத்தை சேர்ந்த செல்வராணி (38) என்பவரும் காயம் அடைந்தார். இதையடுத்து, அருண் கரூர் தனியார் மருத்துவமனையிலும், செல்வராணி காந்தி கிராமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. சாலை விபத்தில் சிக்கிய ஷேன் வார்னே: மருத்துவமனையில் அனுமதி...!
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே சாலை விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. சாலை விபத்தின் போது உதவி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு அறிவிப்பு
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களுக்கு ரூ.5000/- பரிசாக வழங்கப்படும்.
3. செய்யாறு அருகே கார் மீது வேன் மோதி விபத்து : சிறுவன் உள்பட 2 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மாமண்டூரில் கார் மீது வேன் மோதிய விபத்தில் 8 வயது குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. சாலை விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு வெகுமதி
சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு அரசு 5000 ரூபாய் வழங்கும் என அறிவித்து உள்ளது
5. ஆரணி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து; 6 பேர் பலி
ஆரணி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள்; 4 பேர் காயம் அடைந்தனர்.