மாவட்ட செய்திகள்

கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Construction workers protest

கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக்கோரி திருவாரூரில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும். மழைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி திருவாரூர் தொழிலாளர் நல அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு. சங்க மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட துணை செயலாளர் வைத்தியநாதன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, இப்ராஹிம் சேட் வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.