மாவட்ட செய்திகள்

சுரண்டை அருகேமின்சாரம் தாக்கி 2 எலக்ட்ரீசியன்கள் பலிதோட்டத்தில் மோட்டாரை பழுதுநீக்கியபோது பரிதாபம் + "||" + Electricity strike kills 2 electricians

சுரண்டை அருகேமின்சாரம் தாக்கி 2 எலக்ட்ரீசியன்கள் பலிதோட்டத்தில் மோட்டாரை பழுதுநீக்கியபோது பரிதாபம்

சுரண்டை அருகேமின்சாரம் தாக்கி 2 எலக்ட்ரீசியன்கள் பலிதோட்டத்தில் மோட்டாரை பழுதுநீக்கியபோது பரிதாபம்
சுரண்டை அருகே மின்சாரம் தாக்கி 2 எலக்ட்ரீசியன்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுரண்டை:

எலக்ட்ரீசியன்கள்
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சாம்பவர்வடகரையைச் சேர்ந்தவர் அருள்மணி ராஜா (வயது 65). சாம்பவர்வடகரையை அடுத்த ஊர்மேலழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (62). நண்பர்களான இவர்கள் 2 பேரும் எலக்ட்ரீசியன்களாக வேலை செய்து வந்தனர்.
இவர்கள் நேற்று காலையில் சுரண்டை அருகே வேலாயுதபுரத்தில் சுடலைமாட சுவாமி கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் பழுதடைந்த மோட்டாரை பழுது நீக்குவதற்காக சென்றனர்.

மின்சாரம் தாக்கி...
தோட்டத்தில் கிணற்றின் அருகில் உள்ள மோட்டார் அறையில் அருள்மணி ராஜா, சண்முகம் ஆகிய 2 பேரும் மோட்டாரை பழுது நீக்கி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் 2 பேரையும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, சாம்பவர்வடகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை
உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த அருள்மணி ராஜா, சண்முகம் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
தோட்டத்தில் மோட்டாரை பழுது நீக்கியபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.