மாவட்ட செய்திகள்

தென்காசியில்திருநங்கைகள் தர்ணா போராட்டம் + "||" + Transgender Tarna struggle in Tenkasi

தென்காசியில்திருநங்கைகள் தர்ணா போராட்டம்

தென்காசியில்திருநங்கைகள் தர்ணா போராட்டம்
தென்காசியில் திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு, மின்நகர், மேலகரம், ஆலங்குளம், கடையநல்லூர், புளியங்குடி ஆகிய பகுதிகளில் திருநங்கைகள் சுமார் 100 பேர் உள்ளனர். இவர்களில் சிலர் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். 
அதில், எங்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடுகள் கட்டித்தர வேண்டும். மேலும் திருநங்கை நலவாரிய அட்டை, ரேஷன் கார்டு, மருத்துவ காப்பீடு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட வசதிகள் கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.