மாவட்ட செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி + "||" + dailythanthi complent box

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
குப்பை தொட்டி வைக்க வேண்டும்
தஞ்சை நகரில் கீழ வண்டிக்கார தெரு பகுதி உள்ளது. இந்த தெருவில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் இல்லை. இதனால் அந்த குப்பைகளை ஒத்தபிள்ளையார் கோவில் அருகில் கொட்டிவிட்டு செல்கின்றனர். அந்த குப்பைகளை கால்நடைகள் கிளறி விடுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றும் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்தைபிள்ளையார் கோவில் அருகில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
- சரவணன், வண்டிக்காரதெரு, தஞ்சாவூர்.  
சாலை வசதி இல்லை
கும்பகோணம் தாலுகா திருவிடைமருதூர் அருகே புத்தகரம் ஊராட்சியில் நந்திவனம்  கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமானோர் தங்களது குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லலூரிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தகிராமத்தில் நீண்ட காலமாக உரிய சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதிமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. எனவே அந்த பகுதியில் புதிய தார்சாலை அமைத்து தர  வேண்டும்.
-நவநீதன்மாரியப்பன், நந்திவனம். 

தொடர்புடைய செய்திகள்

1. தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
2. தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
3. தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
4. தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள மக்கள் குறை தொடர்பான செய்தி வருமாறு:-
5. தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி