தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள்  கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 13 Jan 2022 8:22 PM GMT (Updated: 13 Jan 2022 8:22 PM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நாட்டு-விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சேதுபாவாசத்திரம்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் நாட்டு-விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி தொழில் 
தஞ்சை மாவட்டத்தில் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, பிள்ளையார் திடல், சேதுபாவாசத்திரம், கழுமம்குடா, காரங்குடா, சம்பைப்பட்டினம், மந்திரிப்பட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, செம்பியன்மாதேவிப்பட்டினம், கணேசபுரம் உள்பட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 4,500 நாட்டுப்படகுகள் உள்ளன. மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 144 விசைப்படகுகள் உள்ளன.  திங்கள், புதன், சனி ஆகிய தினங்களில் விசைப்படகு மீனவர்களும், மற்ற தினங்களில் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
10 ஆயிரம் மீனவர்கள் 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 10 ஆயிரம் பேர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. 

Next Story