மாவட்ட செய்திகள்

தாளவாடி அருகேநாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு சாவு + "||" + Cow death

தாளவாடி அருகேநாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு சாவு

தாளவாடி அருகேநாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு சாவு
தாளவாடி அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு இறந்தது.
தாளவாடி
தாளவாடி அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு இறந்தது.
விவசாயி 
தாளவாடி அருகே உள்ள சேஷன் நகர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 41). விவசாயி. இவர் 3 பசு மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் தன்னுடைய பசு மாடுகளை அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். 
அதன்படி நேற்று தன்னுடைய மாடுகளை அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அந்த மாடுகள் அங்குள்ள மானாவாரி நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு கிடந்த நாட்டு வெடிகுண்டை மாடு ஒன்று கடித்தது. 
சாவு
இதில் வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதனால் மாட்டின் வாய் பகுதி முழுவதும் சிதைந்தது. இதில் ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்து மாடு இறந்தது. 
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘காட்டுப்பன்றிகளை வேட்டையாட சிலர் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டுகளை கடிக்கும்போது, மாட்டின் வாய் சிதைந்து இறந்துவிடுகிறது. எனவே நாட்டு வெடிகுண்டை வைக்கும் மர்ம நபர்கள் மீது போலீசார் மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்,’ என்றனர்.