மாவட்ட செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டிஈரோட்டில் கரும்பு மஞ்சள் பூஜை பொருட்கள் விற்பனை அமோகம் + "||" + Pooja things

பொங்கல் பண்டிகையையொட்டிஈரோட்டில் கரும்பு மஞ்சள் பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்

பொங்கல் பண்டிகையையொட்டிஈரோட்டில் கரும்பு மஞ்சள் பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்
ஈரோட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, மஞ்சள், பூஜை பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்தது.
ஈரோடு
ஈரோட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு, மஞ்சள், பூஜை பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்தது.
பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகை களைகட்ட தொடங்கி இருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக வழிபாட்டுத்தலங்கள் மூடப்படுகிறது. இருந்தாலும், பொங்கல் பண்டிகையை தங்களது வீடுகளில் விமரிசையாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களின் விற்பனை கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. பொங்கல் வைப்பதற்கு பயன்படும் மண்பானைகளை பலரும் விரும்பி வாங்கினர். குறிப்பாக அழகிய வண்ணம் பூசப்பட்ட மண்பானைகளை பெண்கள் பலர் விரும்பி வாங்கிச் சென்றனர்.
விற்பனை அமோகம்
இந்தநிலையில் கரும்பு, மஞ்சள் குலை, பூக்கள், வாழை இலை, தேங்காய்கள், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை நேற்று அமோகமாக நடந்தது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை, சம்பத் நகர், திருநகர் காலனி, கொல்லம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு கரும்பு, மஞ்சள் குலை, பூக்கள் போன்றன விற்பனை செய்யப்பட்டன. அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து பூஜை பொருட்களை வாங்கிச் சென்றார்கள். பொங்கல் பண்டிகையையொட்டி பழவகைகள், பூக்களின் விலை அதிகமாக காணப்பட்டது.