மாவட்ட செய்திகள்

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி + "||" + The boy was electrocuted

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியானான்
லால்குடி
லால்குடியை அடுத்த மாந்துறை கிராமம் பள்ளிவாயலில் வசித்து வருபவர் சவுந்தர்ராஜன். இவர் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் மகிலேஸ்(வயது 7) நேற்று இரவு வீட்டில் இருந்து விளையாட வெளியில் வந்தான். அப்போது வீட்டின் அருகில் உள்ள தெருவிளக்கு மின்கம்பத்தில் பூமியில் பதிக்கப்பட்ட எர்த் கம்பி மூலமாக மின்சாரம் பரவி இருப்பது தெரியாமல் மகிலேஸ் அந்த மின் கம்பத்தை பிடித்தான். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான். இதுபற்றி தகவலறிந்த லால்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி அங்கு சென்று மகிலேசின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
வடமதுரை அருகே மின்சாரம் வாய்ந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.