மாவட்ட செய்திகள்

தினத்தந்தி புகாா் பெட்டி + "||" + Complaint box

தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி
தினத்தந்தி புகாா் பெட்டி
அறிவிப்பு பலகை வேண்டும்
சென்னிமலையில் உள்ள சோழன் வீதியில் புகையிலை குடோன் என்ற இடத்தில் 4 ரோடுகள் பிரிந்து செல்கிறது. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டதால் சமீபத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் தற்போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வேகமாக வந்து கீழே விழுகின்றனர். அதனால் வேகத்தடை இருப்பது குறித்த அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். அல்லது வேகத்தை உள்ள இடத்தில் பிரதிபலிக்கும் தன்மை கொண்ட வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
எஸ்.பன்னீர்செல்வம், சென்னிமலை.


தேங்கி கிடக்கும் குப்பைகள்(படம்) 
அந்தியூர் சூளைமேடு பகுதியில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தமிழ் தென்றல், அந்தியூர். 


குண்டும், குழியுமான சாலை 
சென்னிமலை பஸ் நிலையம் பின்புறம் அருணகிரிநாதர் வீதியில் உள்ள 2-வது தெருவில் தார் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளதால் இந்த வழியே போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதனால் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேஷ், அருணகிரிநாதர் வீதி, சென்னிமலை.

சாக்கடையை தூர்வார வேண்டும்
நம்பியூர் அருகே உள்ள கீழ் காந்திபுரத்தில் சாக்கடை வடிகால் உள்ளது. இந்த சாக்கடை வடிகால் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் சாக்கடை வடிகாலின் ஒருபுற சுவர் இடிந்தும் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை வடிகாலை தூர்வாருவதுடன், இடிந்து விழுந்த சாக்கடை வடிகாலின் சுவரை கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நம்பியூர்.

சாலை சீரமைக்கப்படுமா?
பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள புதிய பாலம் நுழைவு வாயில் ரோடு பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் அந்த ரோட்டில் தட்டுத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து உள்ளனர். எனவே புதிய பாலத்தில் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், பவானி. 

தொடர்புடைய செய்திகள்

1. ‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
2. ‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
3. புகார் பெட்டி
புகார் பெட்டி
4. ‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
5. புகார் பெட்டி
புகார் பெட்டி