மாவட்ட செய்திகள்

கிணற்றில் வாலிபர் பிணம் + "||" + The corpse of a young man in the well

கிணற்றில் வாலிபர் பிணம்

கிணற்றில் வாலிபர் பிணம்
காணாமல் போன வாலிபர் கிணற்றில் பிணமாக கிடந்தார்
வையம்பட்டி
திருச்சி மாவட்டம், என்.பூலாம்பட்டி அருகே உள்ள மதலைப்பட்டியைச் சேர்ந்தவர் மரியசூசை(வயது 35). இவர், கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் என்.பூலாம்பட்டியில் உள்ள கிணற்றில் மரியசூசை பிணமாக மிதந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மரியசூசை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.