தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 Jan 2022 8:55 PM GMT (Updated: 13 Jan 2022 8:55 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

வீணாகும் குடிநீர்
தென்தாமரைகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட முகிலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரே உள்ள சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. மேலும், குடிநீர் சாலையில் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மதன், முகிலன்குடியிருப்பு.
சுகாதார சீர்கேடு
மார்த்தாண்டம் பஸ்நிலையம் செல்லும் சாலை ஓரத்தில் குப்பை கிடங்கு உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதுடன், பொதுமக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                           -சீமான், குலசேகரம்.
இருக்கைகள் சீரமைக்கப்படுமா?
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பணிகள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பல சேதமடைந்து சரிந்த நிலையில் கிடக்கிறது. இதனால், அங்கு வரும் பயணிகள் அமருவதற்கு முடியாமல் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இருக்கைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                    -புகழேந்தி, ஆரல்வாய்மொழி.
வாகன ஓட்டிகள் அவதி
கோட்டார் சவேரியார் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுவதால் கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும்.
                                            -ராசிக், கோட்டார்.
சாலையை சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் களியக்காவிளை வரை பல இடங்களில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் குழிகளால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                         -கே.அனந்தநாராயணன், கன்னியாகுமரி.
சீரான குடிநீர் தேவை
அருவிக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட  9-வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அர்ஜூன், மாத்தூர்.

Next Story