மாவட்ட செய்திகள்

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது + "||" + Cannabis dealer arrested for thuggery

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
குழித்துறை, 
மார்த்தாண்டம் அருகே காட்டாத்துறை கீழபுலிப்பனம் கடைவிளை பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 26). கஞ்சா வியாபாரியான இவர் மீது பல வழக்குகள் உள்ளன.
ஒரு வழக்கு சம்பந்தமாக கடந்த மாதம் அஜித்தை, மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தார். இந்தநிலையில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் அஜித் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பரிந்துரை பேரில் கலெக்டர் அரவிந்த் நடவடிக்கை எடுத்தார். இதனை தொடர்ந்து அஜித்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.