ஈரோட்டில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு; மேலும் 410 பேருக்கு கொரோனா


ஈரோட்டில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு; மேலும் 410 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Jan 2022 8:59 PM GMT (Updated: 13 Jan 2022 8:59 PM GMT)

ஈரோட்டில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ஈரோடு
ஈரோட்டில் முதல் முறையாக ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஒமைக்ரான்
கொரோனா 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த அலை ஓய்ந்து முடிவதற்குள் 3-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா தொற்று பரவலுக்கு இடையே ஒமைக்ரான் பரவுவது மக்களை அச்சமடைய செய்து உள்ளது.
முதல்முறை பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு நிலவரம் குறித்து தினமும் சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்படுகிறது. அதன்படி நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் 231 பேருக்கு ஒமைக்ரான் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக ஒருவர் ஒமைக்ரானுக்கு பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் சிகிச்சை பெற்று குணமடைந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே ஈரோட்டில் முதல் முறையாக ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
410 பேருக்கு கொரோனா
இதற்கிடையே ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 410 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 451 ஆக உயர்ந்தது.
இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 408 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று மட்டும் 84 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். தற்போது 1,330 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 713 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story