சேலம் மாவட்டத்தில் வேகமெடுக்கும் தொற்று: ஒரே நாளில் 426 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் வேகமெடுக்கும் தொற்று: ஒரே நாளில் 426 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Jan 2022 9:03 PM GMT (Updated: 13 Jan 2022 9:03 PM GMT)

சேலம் மாவட்டத்தில் தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் ஒரே நாளில் 426 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம், 
426 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 285 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 426 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் உறுதியானது. இதில் சேலம் மாநகரில் 274 பேரும், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூரில் தலா 5 பேரும், நங்கவள்ளியில் 11 பேரும், அயோத்தியாப்பட்டணத்தில் 14 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர். 
தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 6 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 307 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து ஆயிரத்து 40 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை ஆயிரத்து 732 பேர் இறந்தனர்.
வேகமெடுக்கும் தொற்று
மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் 50-க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக தொற்று பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கொரோனா தொற்றால் அரசு அதிகாரிகளும் பாதிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story