கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு சீருடைகள்


கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு சீருடைகள்
x
தினத்தந்தி 13 Jan 2022 9:04 PM GMT (Updated: 13 Jan 2022 9:04 PM GMT)

மாவட்டத்தில் கோவில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சீருடைகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

கிருஷ்ணகிரி:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 கோவில்களில் பணிபுரியும் 25 அர்ச்சகர்கள், 27 ஆண் பணியாளர்கள், 13 பெண் பணியாளர்கள் என 65 பேருக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தலா 2 சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் டி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் நூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோவில்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும், கோவில்களுக்கு வருகைப்புரியும் பக்தர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், அர்ச்சகர், பட்டாட்சியர், பூசாரிகளுக்கு பருத்தி வேட்டியும், பெண் பூசாரி மற்றும் கோவிலில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவையும், ஆண் பணியாளர்களுக்கு பழுப்பு நிற கால் சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டை துணியும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது என்றனார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் செங்குட்டுவன், முருகன், சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story