மாவட்ட செய்திகள்

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை + "||" + A trader committed suicide by drinking poison near Manur

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
மானூர் அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மானூர்:
மானூர் அருகே உள்ள வடக்கு வாைககுளத்தை சேர்ந்தவர் ஈஸ்டர்ராஜ் (வயது 37). பாத்திர வியாபாரியான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்்ததாக கூறப்படுகிறது. இதனால் ஈஸ்டர்ராஜ், அவரது மனைவி ஏஞ்சல் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்த ஈஸ்டர்ராஜ் மதுகுடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த ஈஸ்டர்ராஜ் தனது தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஈஸ்டர்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.