மாவட்ட செய்திகள்

கள்ள ரூபாய் நோட்டு கொடுத்து ஆடுகள் வாங்கிய தந்தை- மகன் கைது + "||" + duplicate rupees

கள்ள ரூபாய் நோட்டு கொடுத்து ஆடுகள் வாங்கிய தந்தை- மகன் கைது

கள்ள ரூபாய் நோட்டு கொடுத்து ஆடுகள் வாங்கிய தந்தை- மகன் கைது
பொம்மிடி அருகே சந்தையில் கள்ள ரூபாய் நோட்டுகள் கொடுத்து ஆடுகள் வாங்கிய தந்தை- மகன் கைது செய்யப்பட்டனர்.
பொம்மிடி:-
பொம்மிடி அருகே சந்தையூரில் நடந்த ஆட்டு சந்தையில் ரேகடஅள்ளி அண்ணா நகரை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகளை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த மாணிக்கம் (வயது 58), அவருடைய மகன் சிவசங்கரநாதன் (23) ஆகிய இருவரும் ரூ.16 ஆயிரம் கொடுத்து வாங்கினர். அந்த ரூபாய் நோட்டுகளில் ரூ.10 ஆயிரம் கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை- மகன் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 1,600 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.