மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை


மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை
x
தினத்தந்தி 13 Jan 2022 9:27 PM GMT (Updated: 13 Jan 2022 9:27 PM GMT)

நெல்லையில் மல்லிகைப்பூ கிலோ ரூ3 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

நெல்லை:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூக்களின் தேவை அதிகரித்தது. இதனால் நெல்லையில் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. பனிப்பொழிவு காரணமாக மல்லிகை, பிச்சி போன்ற பூக்களின் வரத்து குறைவாக உள்ளது. அந்த பூக்களின் விலை கிலோ ரூ.1,500-க்கு விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் நேற்று மல்லிகைப்பூ விலை இரு மடங்காக அதாவது 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. 

இதேபோல் பிச்சிப்பூ விலையும் கிலோ ரூ.2,500 வரை உயர்ந்து விற்பனை ஆனது. கனகாம்பரம் ரூ.2 ஆயிரம் ஆக விலை உயர்ந்தது. இதுதவிர செவ்வந்தி, சம்பங்கி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களின் விலையும் வழக்கத்தைவிட அதிகமாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள மொத்த மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து போட்டி போட்டு பூக்களை வாங்கிச்சென்றனர்.

Next Story