மாவட்ட செய்திகள்

கார் மோதி பஞ்சாயத்து ஊழியர் பலி + "||" + In South Valliyoor Panchayat employee killed in car crash

கார் மோதி பஞ்சாயத்து ஊழியர் பலி

கார் மோதி பஞ்சாயத்து ஊழியர் பலி
தெற்கு வள்ளியூர் பகுதியில் கார் மோதி பஞ்சாயத்து ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
பணகுடி:
பணகுடியை அடுத்த வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40). இவர் தெற்கு வள்ளியூர் பஞ்சாயத்தில் குடிதண்ணீர் திறக்கும் பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் தெற்கு வள்ளியூர் சந்திப்பு நான்கு வழிச்சாலை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் பெரியசாமி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கூடங்குளத்தை சேர்ந்த நடராஜன் (52) என்பவரை கைது செய்தார்.