மாவட்ட செய்திகள்

நெல்லையில் மேலும் 415 பேருக்கு கொரோனா + "||" + Corona for another 415 people in Nellai

நெல்லையில் மேலும் 415 பேருக்கு கொரோனா

நெல்லையில் மேலும் 415 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று மேலும் 415 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்து 769-ஆக உயர்ந்துள்ளது. இதில் 49 ஆயிரத்து 612 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,719 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 438-ஆக உயர்ந்துள்ளது.