மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழப்பு + "||" + 3 fatalities to Corona

கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழப்பு
மதுரையில் நேற்று மேலும் 599 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. புதிதாக 3 பேர் உயிரிழந்தனர்.
மதுரை
மதுரையில் நேற்று மேலும் 599 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. புதிதாக 3 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயிரத்திற்கும் குறைவான நபர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்து 20 ஆயிரத்து 886 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதுபோல் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 25 பேர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. மதுரையிலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக பாதிப்பு அதிகமாகி வருகிறது.
நேற்று மதுரையில் ஒரே நாளில் 599 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. 8,450 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தான் இத்தனை பேருக்கு பாதிப்புகள் உறுதியாகி இருக்கிறது. இதன்மூலம் மதுரையில் இதுவரை மொத்தமாக பாதித்தவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 625 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக 61 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர்.
3 பேர் உயிரிழப்பு
மதுரையில் கடந்த சில தினங்களாக உயிரிழப்புகள் அதிக அளவில் பதிவாகாமல் இருந்த நிலையில், நேற்று மதுரையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புடன் 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதன்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது ஆண் மற்றும் 31 வயதுடைய வாலிபர் ஆகியோர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுபோல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது ஆணும் உயிரிழந்தார். இவர்கள் 3 பேருக்கும் கொரோனா பாதிப்புடன் வேறு சில இணை நோய்கள் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை முன்னாள் எம்.பி. ராம்பாபு கொரோனாவுக்கு பலி
மதுரை முன்னாள் எம்.பி. ராம்பாபு கொரோனாவுக்கு பலியானார்.
2. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தி.மு.க. நிர்வாகி பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தி.மு.க. நிர்வாகி பலியானார்.
3. ஊருணியில் மூழ்கி வாலிபர் பலி
வெம்பக்கோட்டை அருகே ஊருணியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
4. ஆற்றில் மூழ்கி தாய், மகன் உள்பட 3 பேர் பலி
சாத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
5. கார் மோதி தப்பாட்ட கலைஞர் பலி
குளித்தலை அருகே கார் மோதி தப்பாட்ட கலைஞர் பலியானார். இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.