மாவட்ட செய்திகள்

மீனவர்கள் வலையில் சிக்கிய 1,000 கிலோ எடையுள்ள ராட்சத கோலா மீன்கள் + "||" + Giant cola fish weighing 1,000 kg caught in fishermen's nets

மீனவர்கள் வலையில் சிக்கிய 1,000 கிலோ எடையுள்ள ராட்சத கோலா மீன்கள்

மீனவர்கள் வலையில் சிக்கிய 1,000 கிலோ எடையுள்ள ராட்சத கோலா மீன்கள்
மீனவர்கள் வலையில் சிக்கிய 1,000 கிலோ எடையுள்ள 3 ராட்சத கோலா மீன்கள் சிக்கின.
சென்னை திருவொற்றியூர் ஜோதி நகரைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமான ஐ.எஸ்.வி. சுறா என்ற விசைப்படகில் 13 பேர் கொண்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்றனர். நடுக்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அவர்கள் விரித்த வலையில் தலா 1,050 கிலோ எடையும், 12 அடி உயரமும் கொண்ட ராட்சத ஏமன் கோலா வகையைச் சேர்ந்த 3 மீன்கள் சிக்கின.

உடனே அதனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள், மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத கோலா வகை மீன்களை ஆர்வத்துடன், ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.